Thursday, June 17, 2010

ராவணன் – ஒரு வீரனின் கதை

சின்ன வயசில சித்திரக்கதை புத்தகங்களில் அல்லது  கட்டுக்கட்டாக  ராஜாஜியின் ராமாயாண புத்தகத்தில்  படித்தவர்கள் எங்காவது பிரசங்கங்களில் அல்லது ஆன்மீக சொற்பொழிவுகளில் ராமாயண கதை கேட்டவர்கள் என எங்களுக்கு தெரியாத ராமாயணமா என நினைப்பவர்கள் ஓகே படம் பாரக்கதேவையில்லை…


கதை மூலம் – வான்மீகி முனிவர் & கம்பர்
திரைக்கதை வசனம் இயக்கம் – மணிரத்னம் சிறிய ஆனால் குறிப்பிடத்தக்க மாற்றங்களுடன்
ஒளிப்பதிவு – சந்தோஷ் சிவன்
இசை -  இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்

பாத்திரங்கள்

நவீன ஸ்ரீராமன் – பிருத்விராஜ்
சீதாதேவி - ஐஸ்வர்யாராய்
பத்துத்தலை நல்ல ராவணன் – சீயான் விக்ரம்
சூர்ப்பனகை - பிரியாமணி
அனுமார் – கார்த்திக் இவர் படத்தில் அறிமுகப்படுத்தப்படும் போது குறுக்காலே படுத்திருந்து பின்னர் குரங்கு போல தாவி வரும்   காட்சிகளில் இவர்தான் அனுமார் என்று சொல்லி விடுகிறார்கள்
கும்பகர்ணன் – பிரபு குண்டாக இருக்கிறார் என மணிரத்னம் தெரிவு செய்தாரோ என்னமோ…
விபீஷணன் – மன்னிக்கவும் என்னால் அடையாளம் காணமுடியவில்லை !!


சந்தோஷ் சிவனின் ரசனைமிக்க ஒளிப்பதிவில் இசைபுயலின் உள்ளத்தை அள்ளி செல்லும் இசையில் மணிரத்னம் வழங்கியிருக்கும் இந்த நவீன ராமாயணத்தை ஒரு வீரனுக்குள் ஒழிந்திருக்கும் காதலை விக்ரமின் அற்புதமான நடிப்பின் வாயிலாக பார்க்க விரும்புவர்களுக்கு இது மணிரத்னத்தின் இன்னுமொரு ரோஜா.

என்னை பொறுத்தவரை படத்தில் என்னை மிகவும் கவர்ந்தது சந்தோஷ்சிவனின் ஒளிப்பதிவில் மிக அற்புதமான லொகேஷன்களில் எடுக்கப்பட்ட காட்சிகள்.. ஒவொரு லொகேஷன்களும் விழிகளை விரியச்செய்கின்றன. சந்தோஷ்சிவனின் கமெரா கோணங்களும் அசைவுகளும் முக்கியமாக விக்ரம் ஆற்றின் நடுவே  தெப்பத்தில்  சுற்றிக்கொண்டிருக்கும் காட்சி ப்ருத்விராஜ் சிகரெட்டால்  பத்திரிகையில் வந்த முகங்களை சுடும் காட்சி என்பன சொல்லும் படியான உதாரணங்கள்..  இவரின் சிறைச்சாலை தளபதி உயிரே இருவர் அசோகா போன்ற படங்கள் பார்த்தவர்களுக்கு இன்னுமொரு அனுபவம் . படத்தின் முழு பிரேம்களையும் ஸகிறீன் சொட் எடுத்தால் வாழ்க்கை  பூரா ஒவ்வொண்ணா வால்பேப்பராக போட்டுக்கொண்டே இருக்கலாம் .
முக்கியமாக  அந்த கிளைமாக்ஸ் … ம்ஹூம்.. இது வரை எந்த தமிழ் படங்களிலேயோ ஏன் இந்திய படங்களிலேயோ கூட பார்த்ததில்லை.

கோபமான முகத்துடன் படம் முழுக்க ஈரமாக ஐஸ்வர்யாராய்.. வீரமும் தாபமும் ஆக்ரோஷமும் நிறைந்த விக்ரம்.. நடிப்பில்... எனக்கு சொல்ல தெரியாதுங்கோ அதால விட்டிற்றன் .. மனுசன் .. கலக்கியிருக்கிறார் . பிருத்விராஜ் கொடுத்து வைத்தவர் பிரசாந் அப்பாஸ் அஜித் வரிசையில் ஐசுடன் டூயட் பாடியவர்களின் வரிசையில் சேர்ந்து புகழ் தேடிக்கொண்டார்.
வழக்கமான மணிரத்னங்களின் படத்தில் வரும் ரெயில் காட்சியும் தப்பாமல் வருகிறது உயிரே படத்தில் தைய தையா பாடலில் வருவது போன்ற காட்சி அதே இடத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது.

இசைபுயல் ஆரம்பத்திலேயே அதிரடியாகவருவார் படம் முழுக்க அடிக்கடி நினைவுபடுத்திகொண்டே இருந்தார்  காட்டுசிறுக்கி பாடல் ஒருமுறை பின்னணியில் அடிக்குரலில் வரும் அனுபவித்து பாருங்கள்..   நான் மிஸ்பண்ணுவதாக நினைப்பது பாடல்காட்சிகளை காட்டுசிறுக்கி முழுமையாக இல்லை. உசிரே போகுதே பாடல்  முதன் முறையாக மணிரத்னத்தின் படத்தில் திரைக்கதை ஓட்டத்துடன் பொருந்தி வராத பாடலாக எனக்கு தோன்றியது.
நவீன ராமயணம் சூர்ப்பனகையின் காதலிலும்  மற்றும் வபீஷணனின் மனமாற்றத்துக்கு பின்னரும் முழுமையாக வேறுபடுகிறது. பாத்திரங்கள் அதேபோல படைக்கப்படிருப்பது சுவாரஸ்யமாக இருகிறது.
இந்த படத்தில் உள்குத்து அரசியல் ஏதும் இருக்கோ எனக்கு தெரியாதப்பா நான் படத்தை நன்றாக ரசித்தேன். விஜய் ரசிகர்களுக்கும் இந்த ரசிகர்களுக்கும் நிறைய வித்தியாசம் தெரிந்தது அமைதியாக அடிதடி இல்லாமல் வந்து போனார்கள் ஐஸுக்கும் இசைப்புயலுக்கும் டைட்டிலில் விசில் குடுத்தார்கள். ஒரு வயது போன ஒருவர் இடைவேளையில் எழுந்து சென்றபோது மணிரத்னத்தின் இன்னொரு குப்பை என்றார் ... எப்படி என்று தெரியவில்லை .. 

மொத்தத்தில் வழமையான மணிரத்னம் படங்கள் போல படம் எத்தனை முறையும் பாரக்கலாம் ..



3 comments:

VELAN said...

Ravanan thangachi kundothari illa boss. Soorpanagai...

ARV Loshan said...

//என்னை பொறுத்தவரை படத்தில் என்னை மிகவும் கவர்ந்தது சந்தோஷ்சிவனின் ஒளிப்பதிவில் மிக அற்புதமான லொகேஷன்களில் எடுக்கப்பட்ட காட்சிகள்../
நானும் நானும்..

//படத்தின் முழு பிரேம்களையும் ஸகிறீன் சொட் எடுத்தால் வாழ்க்கை பூரா ஒவ்வொண்ணா வால்பேப்பராக போட்டுக்கொண்டே இருக்கலாம்//
ஆமாம்.

//முக்கியமாக அந்த கிளைமாக்ஸ் … ம்ஹூம்.. இது வரை எந்த தமிழ் படங்களிலேயோ ஏன் இந்திய படங்களிலேயோ கூட பார்த்ததில்லை.//
இல்லை சகோ.. அடிக்கடி பல இடங்களில் பார்த்தது.. ஆனால் நாயகன்,உயிரேக்குப் பிறகு மணி தான் ஹீரோவைக் கொன்றுள்ளார். அது மட்டுமே புதுசு.


//உசிரே போகுதே பாடல் முதன் முறையாக மணிரத்னத்தின் படத்தில் திரைக்கதை ஓட்டத்துடன் பொருந்தி வராத பாடலாக எனக்கு தோன்றியது.//
மீண்டும் ஒத்துப் போகிறோம். :)

நல்ல விமர்சனம்.

தாங்கள் எனக்கு முதலே இட்டுள்ளீர்கள்.
வாழ்த்துக்கள்.

LOSHAN
http://arvloshan.com/

ARV Loshan said...

//ஒரு வயது போன ஒருவர் இடைவேளையில் எழுந்து சென்றபோது மணிரத்னத்தின் இன்னொரு குப்பை என்றார் ... எப்படி என்று தெரியவில்லை ..
//
அந்தக் கிழம் மொக்கைப் பீசப்பா,, கண்டுக்காதீங்க

Post a Comment